Categories
உலக செய்திகள்

சொன்னதை நிறைவேற்றிய அமெரிக்கா…. தடுப்பூசி பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகள்…. அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை….!!

அமெரிக்கா கடந்த மே மாதம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் அந்நாட்டிலிருக்கும் மீதமுள்ள கொரோனா தடுப்பூசிளில் தற்போது வரை சுமார் 11 கோடியை 60 நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்கா கடந்த மே மாதம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது கொரோனா தடுப்பூசியின்றி தவிக்கும் நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருக்கும் மீதமுள்ள கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சுமார் 11 கோடி தடுப்பூசிகளை 60 நாடுகளுக்கு அமெரிக்கா தானம் வழங்கியுள்ளதாக அந்நாட்டின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |