சீனாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 மாதத்தில் சுமார் 70 சதவீதம் பேர் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீன நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை அந்நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். அதிலும் முக்கியமாக கொரோனா குறித்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியினை ஆரம்பித்து வெறும் 10 மாதங்கள்தான் நிறைவடைந்துள்ளது.
ஆகையினால் வெறும் 10 மாதத்தில் சீனாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 70% பேருக்கு முழுமையான தடுப்பூசியை செலுத்தியுள்ளது ஒரு மிகப்பெரிய சாதனை என்று அந்நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.