Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்ளோ பேர் பூஸ்டர் டோஸ்ஸை போட்டாச்சா…? தகவல் வெளியிட்ட அமெரிக்கா….!!

அமெரிக்காவில் சுமார் 1.7 கோடி நபர்கள் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்சை செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது.

அதன்படி சுமார் 42 கோடிக்கும் அதிகமான கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி டோஸ்கள் அமெரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி அமெரிக்க நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியாவது, அமெரிக்க மக்களில் சுமார் 1.7 கோடி நபர்கள் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியின் போஸ்டர் டோஸ்சையும் செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |