இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் கொடுத்ததையடுத்து தற்போது கனடா மேலே குறிப்பிட்டுள்ள தடுப்பூசியினை முழுமையாக செலுத்தி கொண்ட நபர்கள் தங்கள் நாட்டிற்குள் தாராளமாக நுழையலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு அதற்கு எதிரான தடுப்பூசியினை தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கனடா அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது வருகின்ற 30 ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை முழுமையாகப் பெற்றுக் கொண்ட நபர்கள் தங்கள் நாட்டிற்குள் தாராளமாக நுழையலாம் என்று தெரிவித்துள்ளது.