இங்கிலாந்திலிருந்து தங்களுடைய நாட்டிற்குள் வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று போர்ச்சுக்கல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அரசாங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் இல்லை என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது. மேலும் இந்தத் புதிய விதி ஜூன் 28 முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.