தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்டு உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸை முன்னிட்டு இந்த மாதம் 17 ஆம் தேதியிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி 9 ஆம் தேதி வரை குறைந்தபட்சமாக ஒரு தவணை தடுப்பூசியை கூட செலுத்தி கொள்ளாத நபர்கள் இரவு நேரத்தில் வெளியே வரகூடாது என்று லெபனானின் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 50 பிறழ்வுகளை கொண்டு உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது உருமாற்றமடைந்த சிறிது நாட்களிலேயே இங்கிலாந்து உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் லெபனானின் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது மிக வேகமாக பரவி வரும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணத்தால் அந்நாட்டில் தற்போது வரை ஒரு தவணை தடுப்பூசியை கூட செலுத்தி கொள்ளாத நபர்கள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த இரவு நேர ஊரடங்கு டிசம்பர் 17ஆம் தேதியில் இருந்து அடுத்தாண்டின் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.