அடுத்தாண்டின் மத்தியில் அனைத்து நாடுகளிலும் கொரோனா தொடர்பான தடுப்பூசி 70% பேருக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் அடுத்தாண்டின் மத்தியில் கொரோனா தொடர்பான தடுப்பூசியை 70% பேர் போட்டிருக்க வேண்டும் என்று உலக நலவாழ்வு அமைப்பின் இயக்குனரான அதனோம் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் சமத்துவமின்மை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது சில நாடுகளிலுல்ல பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுவதால் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ள சில நாடுகளுக்கு அதனை வழங்குவதற்கு சிக்கல் ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.