Categories
உலக செய்திகள்

அலட்சியமாக செயல்பட்ட அரசாங்கம்…. கட்டுப்பாடுகளால் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்…. வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட அதிபர்….!!

உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவிற்கு மிக எளிதில் கிடைக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்வதில் அந்நாடு ஆர்வம் காட்டாததால் தற்போது சில முக்கிய இடங்களில் தொற்று வேகமாக பரவியதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் பொதுமக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார்.

உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக ஸ்காட் மோரிசன் இருந்து வருகிறார். இதனையடுத்து ஆத்திரேலியா பணக்கார நாடு என்பதால் கொரோனா குறித்த தடுப்பூசி மிக எளிதில் கிடைத்துள்ளது. இருப்பினும் அதனை வினியோகம் செய்வதில் அந்நாட்டு அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளதால் அங்குள்ள மக்கள் தொகையில் 11% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவிலுள்ள முக்கிய நகரமான சிட்னி போன்ற பல பகுதிகளில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிறுத்தியே அந்நாட்டின் பிரதமர் வெளிப்படையாக பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது, தாங்கள் கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்வதற்காக போடப்பட்டிருந்த திட்டத்தை எங்களால் அடைய முடியவில்லை என்று கூறியுள்ளார். அதன்பின்கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வது தொடர்பான பொறுப்பை தானே நேரடியாக செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |