ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் 12 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு கொரோனா குறித்த 2 வகையான தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் சம்மதம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அந்தந்த நாடுகள் தன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 12 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் சம்மதம் அளித்துள்ளது.
அதன்படி 12 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு பைசர்/பயோ என்டெக் மற்றும் மாடர்னா ஆகிய 2 வகையான தடுப்பூசிகளை மட்டுமே செலுத்துவதற்கு ஐரோப்பிய மருத்துவ கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.