கொரோனா தொற்றுக்கு எதிராக “அப்தலா” என்னும் தடுப்பூசி சுமார் 92.28% செயல்படுவதாக பரிசோதனையின் முடிவில் கியூபா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் பரவிய தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அதனை ஏற்றுமதி செய்வதற்கு கியூபா திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கியூபா, கொரோனா வைரஸ்ஸிற்கு எதிராக சுமார் 5 தடுப்பூசிகளை பரிசோதனை செய்துள்ளது.
அதில் ஒன்றான “அப்தலா” என்னும் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக சுமார் 92.28% செயல்படுவதாக கியூபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து கியூபாவின் பயோடெக்னாலஜி ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையாவது, இந்த “அப்தலா” என்னும் கொரோனா தடுப்பூசி 3 டோஸ் விதிமுறைகளை கொண்டுள்ளதாகவும், இது உலக சுகாதார தேவைகளை 2 ஆவது இடத்தில் நின்று பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.