Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு போடப்படுமா…? இங்கிலாந்தில் ஏற்பட்ட புதிய பிரச்சனை…. அச்சத்திலிருக்கும் பொதுமக்கள்….!!

இங்கிலாந்தில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், ஜூலை 19 ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டிற்கான காரணம் என்னவென்றால், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு பின்விளைவு ஏற்படுவதால், 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு இதனை செலுத்துவதை தவிர்த்துவிட்டு பைசர் மற்றும் மெடெர்னா தடுப்பூசிகளை வழங்குவதால் தான் இங்கிலாந்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜூலை 19 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசியைப் போட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஜூலை 19ஆம் தேதி பொது முடக்கத்தை விலகாததால் பொதுமக்கள் கோபத்திலுள்ளார்கள். இந்த தடுப்பூசி தட்டுப்பாட்டினால் ஜூலை 19 ஆம் தேதி ஊரடங்கு விலக்கப்படாமல் மேலும் நீட்டிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Categories

Tech |