நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் சந்தானம்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லாரியில் இருந்து கீழே இறங்கும் போது சந்தானம் காலில் அடிபட்டுள்ளது. ஆனால் அந்த காயம் சரியாகாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் சந்தானம் வீட்டில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் சந்தானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.