துபாய் நாட்டு இளவரசர் ஓய்வுக்காக சென்ற இடத்தில் பல்வேறு குதிரைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
துபாய் நாட்டின் இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் ஓய்வு பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் துபாய் ஆட்சியாளரின் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் இங்கிலாந்திலுள்ள கோடால்பின் குதிரைலாயத்திற்கு சென்றுள்ளார். அந்த குதிரைலாயத்தில் உள்ள குதிரைகளை பார்வையிட்ட படி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் குளிருக்கு அணியும் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் கடந்த மே மாதம் அவருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனையடுத்து துபாய் இளவரசர் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கோடால்பின் குதிரைலாயத்தில் அயல்நாட்டில் பிறந்து வளர்ந்த அடயார் குதிரையுடன் அவர்கள் சேர்ந்து நிற்பது போல பதிவாகியுள்ளது. இதுகுறித்து துபாய் இளவரசர் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு கூறியதாவது “விரைவில் கல்வியும் பயிற்சியும் துவங்க வேண்டும். ராஷித் மற்றும் ஷேக்கா என்ற என்னுடைய இரு குழந்தைகளும் அடயார் குதிரையை பார்த்து பாராட்டுவதற்காக வந்துள்ளனர்” என கூறியுள்ளார். குறிப்பாக அடயார் குதிரை என்பது நடப்பாண்டில் தோரோபிரட் ரேஸ்கோர்சில் நடைபெற்ற குதிரை போட்டியில் வெற்றி பெற்ற குதிரையாகும். இதுமட்டுமின்றி துபாய் இளவரசர் மேலும் பல குதிரைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.