Categories
உலக செய்திகள்

மர்மமான மரணம்…. வீட்டில் கிடந்த சடலங்கள்…. விசாரணை நடத்தும் போலீசார்….!!

ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இரு சடலங்களை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இங்கிலாந்தின் Kettering நகரத்தில் Slate Drive என்னும் பகுதி உள்ளது. அந்த பகுதியில் 3 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிலிருந்து கடந்த 27ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் போலீசார் இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த இருவரும் கணவன் மனைவியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் அவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இருவரும் அந்த வீட்டில் கடந்த இரண்டு வருட காலமாக வசித்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்தில் விசாரணை செய்வதற்காக 15க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடயவியல் மற்றும் புலனாய்வு நிபுணர்கள் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுக்குறித்து போலீசார் கூறியதாவது “இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தாலோ அல்லது கண்காணிப்பு கேமரா மற்றும் போர்வெல் கேமராவில் ஏதாவது காட்சிகள் பதிவாகி இருந்தாலோ தங்களை அணுகுங்கள்” என கேட்டுக்கொண்டனர். பின்னர் சடலங்களின் பிரேத பரிசோதனை வாரக் கடைசியில் நடத்தப்பட உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |