பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் விசாவை நீட்டிக்க இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆவார். இவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை கைதியாக 7 ஆண்டுகள் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாப் சிரிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு சிறையில் வைத்து சிகிச்சை அளிக்க இயலாத காரணத்தினால் நவாஸ் ஷெரீப்பை லண்டன் மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டுமென மருத்துவர்கள்குழு தெரிவித்துள்ளது. இதனை இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஏற்று அவருக்கு நான்கு வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதனைதொடர்ந்து அவர் ஜாமீன் காலம் முடிந்த பிறகும் சிகிச்சை பெறுவதாக கூறி லண்டனிலேயே தங்கியுள்ளார்.
இதனால் நவாஸ் ஷெரீப் தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தத்தோடு அவரை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டின் பிரதமரான இம்ரான் கான் தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நவாப் ஷரிப் இங்கிலாந்து அரசிடம் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்கான விசாவை நீட்டிக்க கோரி விண்ணப்பம் அளித்துள்ளார். இந்தக் கோரிக்கையை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து குடியேற்ற நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை நவாஸ் ஷெரீப் இங்கிலாந்தில் தங்க தடை இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.