மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்ட நேரம் pubg விளையாடியதால் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நீமூச் பகுதியில் பர்கான் குரேஷி என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் இரவு முழுவதும் pubg விளையாடியுள்ளார். விளையாடி விட்டு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கி ,மீண்டும் எழுந்து சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்து விட்டார் .
தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாக pubg கேம்மை விளையாடியுள்ளார். இதனால் சோர்வடைந்து உள்ள அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பின் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகவும் ,நீண்ட நேரம் கேம் விளையாடியதால் இதயம் செயல் இழந்து மாரடைப்பு ஏற்பட்டு அதனால் உயிர் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.