Categories
மாநில செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. ரூ.‌ 1000 உதவித்தொகை பெற கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 1 முதல் 11-ஆம் தேதி வரை ஆகும். இந்த திட்டத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவிகள் மட்டுமே பயன்பெற தகுதி ஆனவர்கள். அதோடு மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டுமே தவிர நேரடியாக விண்ணப்பிக்க கூடாது. இந்த திட்டம் குறித்து நவம்பர் 11-ஆம் தேதி சிறப்பு முகாம்கள் கல்லூரிகளில் நடைபெறும். இந்த திட்டத்தில் மாணவிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனையடுத்து 2,3,4-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்க தவறியிருந்தால் முதலாம் ஆண்டு மாணவிகள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 9150056809, 9150056805, 9150056801, 9150056810 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம். மேலும் மாணவிகள் அனைவரும் நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

Categories

Tech |