வாழைக்காய் வடை
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 4
பச்சைப் பயறு – 100 கிராம்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 10
இஞ்சி – ஒரு துண்டு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைக்காய்களை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊற வைத்து , பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மசித்த வாழைக்காய் , நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் புதுமையான வாழைக்காய் வடை தயார் !!!