Categories
மாநில செய்திகள்

இன்னும் 15 நாட்களுக்குள்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கிர்லோஸ் குமார், முதன்மை செயலாளர், தொழிலாளர் கமிஷனர் அப்துல் ஆனந்த் மற்றும் தொழிலாளர் துறை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 30ஆம் தேதி 50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி 35 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நிலுவையில் உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நிலுவையில் உள்ள நலத்திட்ட உதவி மனுக்களை 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று கணேசன் அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொழிலாளர் துறையின் நிதிசார், சமரசம் மற்றும் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நிலைகளையும் ஒரு மாதத்திற்குள் முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |