Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் 4 நாள் தான் இருக்கு… ஆர்யாவின் ‘டெடி’… ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சதீஷ் ,சாக்ஷி அகர்வால், கருணாகரன் ,இயக்குனர் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

https://twitter.com/arya_offl/status/1368434264300285956

இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . சமீபத்தில் இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த படம் வருகிற மார்ச் 12ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது . தற்போது  நடிகர் ஆர்யா நடிப்பில் எனிமி, சார்பட்டா பரம்பரை ,அரண்மனை 3 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.

Categories

Tech |