Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு… ஒருவர் வெளியேறனும்… அதிரடியாக கமல் பேசும் ஃபர்ஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாண்டு வருகின்றனர். இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

இன்று வார இறுதிநாள் என்பதால் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசுவார்  . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ‘இறுதிப்போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இவர்களில் ஒருவர் வெளியேற போகிறார்’ என அதிரடியாக பேசுகிறார் கமல். இந்த வாரம் யார் ? வெளியேறுகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |