Categories
சினிமா தமிழ் சினிமா

‘இன்னும் சில வாரங்களில் சம்பவங்கள் தொடரும்’… இயக்குனர் பாண்டிராஜ் போட்ட டுவிட் … உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்…!!!

‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடர இருப்பதாக இயக்குனர் பாண்டிராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் . இவர் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது . இதையடுத்து நடிகர் சூர்யா நவரசா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்க உள்ளார் . மேலும் இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார் . இந்தப் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க டி இமான் இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்த ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. அதில் ‘2021 நமக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும் . உங்கள் எதிர்பார்ப்பும் ஆவலும் புரிகிறது . சூட்டிங் பிப்ரவரியில் தான். இன்னும் முக்கியமான இரண்டு கேரக்டர்கள் பைனல் ஆனதும் 2 , 3 வாரங்களில் சம்பவங்கள் தொடரும். காத்திருப்போமே’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |