சென்னை மாத்தூரில் பாஜக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கிய பிறகு சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரையில் கல்லூரி முன்னே ஒரு மாணவியின் பெற்றோர் அடிக்கப்பட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மதுரையில் நடந்த வீடியோ காட்சி பார்க்கும் போது நமது சமுதாயம் எந்த அளவிற்கு கெட்டபோய் உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. தாக்கியவர்கள் சிறிதும் பயமில்லாமல் சட்டத்தின் மீது மரியாதை இல்லாமல் போது இடத்தில் மாணவியின் தந்தையை அடித்துள்ளனர். சில நேரங்களில் காவல்துறை கடமையாக தான் இருக்க வேண்டும். காவல்துறை கடமையாகும் போது பாஜக கூட இருக்கும். அவ்வாறு காவல்துறை கடமையாக இல்லை என்றால் சாமானிய பெண்கள் ரோட்டில் நடமாட முடியாது என்று தெரிவித்துள்ளார். ஒரே கோரிக்கை காவல்துறை சில இடங்களில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். ஓல்டு ஸ்டைல் காவல்துறை தேவையில்லை.
அதனை தொடர்ந்து காவல்துறை கையை கட்ட வீழ்த்து விட்டு சில விஷயங்களை தைரியமாக பண்ண சொல்ல வேண்டும். சமுதாயத்தில் அதை பண்ண சொல்லவில்லை என்றால் சமுதாயம் என்று ஒன்று இருக்காது இன்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆர்எஸ்எஸ் பேரணி தமிழகத்தில் நடத்துவதற்கு கலவரத்தை தூண்டுவதாக தான் என சேகர் பாபு பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சேகர் பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சி மாறி கட்சி மாறி வருவார்கள். கட்சிக்கு விசுவாசமாக சில கருத்துக்களை சொல்கின்றனர். சேகர் பாபுவை காற்றில் வரும் பட்டத்தைப் போல கட்சி மாறுபவர். அவர் நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும் அவர் அதிமுகவில் இருந்து போது திமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று. இன்றும் அவர் திமுகவுக்கு விசுவாசம் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்கிறார். இந்தியாவில் வட மாநிலங்களில் நடந்த கலவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். இது புரியாதவர்கள் ஆர்எஸ்எஸ் மீது அப்பட்டமான பொய் கூறுகிறார்கள். சேகர்பாபு சாப்பிடுற வீட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பேசுகிறார். இன்னைக்கு திமுகவில் உள்ளார், நாளைக்கு எங்கு இருப்பார் என்று தெரியவில்லை. அவர் சொல்லுவதை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.