Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… எல்.பி.ஜி. சிலிண்டர் தொழிலார்கள்… நெல்லையில் ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு எல்.பி.ஜி சிலிண்டர் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் பாலு, செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சக்திவேல் ஆகியோரின் தலைமையில் கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில்  கொரோனா காலத்திலும் கேஸ் வினியோகம் செய்து வருவதால் எங்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் என்றும், முறையான மாத சம்பளம், பி.எப், இ.எஸ்.ஐ போன்ற சலுகைகளும் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து கேஸ் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள்கொரோனாவால்  பாதிக்கப்பட்டு இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை ஜூன் 30ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |