Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மருத்துவமனையை முற்றுகையிட்ட கட்சியினர்… 24 பேர் கைது…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பார்வார்டு பிளாக் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் கம்பம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் கம்பம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு, சி.டி.ஸ்கேன் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் அறிவழகன் தலைமை தங்கியுள்ளார்.

இந்நிலையில் கட்சியினர் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கம்பம் தெற்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் கட்சி உறுப்பினர்கள் தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பார்வார்டு பிளாக் கட்சியினரை சேர்ந்த 24 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்துள்ளனர்.

Categories

Tech |