Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி… கொரோனா சிகிச்சை மையத்திற்கு முன்பு… மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்திற்கு எதிர்புறம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா மையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் மத்திய அரசின் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதனையடுத்து மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் நெல்லை கிளை தலைவர் பிரான்சிஸ் ராய் தலைமை தங்கியுள்ளார் மேலும் செயலாளர் ராஜா விக்னேஷ், பொருளாளர் முகமது இப்ராஹிம் மற்றும் பல மருத்துவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள்.

Categories

Tech |