Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.381¾ கோடியில் மருத்துவமனை… எம்.பி நேரில் ஆய்வு… விரைவில் பணியை முடிக்க உத்தரவு…!!

ரூபாய் 381 கோடியே 76 லட்சத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வரும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கௌதமசிகாமணி நேரில் ஆய்வு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்காக ரூபாய் 381 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கவுதமசிகாமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மண் பரிசோதனை சான்று முறையாக பெற்றுள்ளதா, கட்டிடம் தரமான பொருட்களால் கட்டப்படுகின்றதா போன்றவற்றை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலும் வரைபடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பின் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வில் திமுக மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய குழு முன்னாள் துணைத்தலைவர் பீ.கே.முரளி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா, உதவி பொறியாளர்கள் வெங்கடேச பெருமாள், கார்த்திகேயன், இளநிலை பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |