Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல்… முன்னேற்பாடு தீவிரம்… போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு..!!

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருகின்ற 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் முன்னேற்பாடாக அலுவலகத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார்.

வருகின்ற 12-ம் தேதி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் நேற்று மாலை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் திருப்பத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள அலுவலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வருகின்ற 12-ம் தேதி அந்த அலுவலகத்திற்கு வருவார்கள். அப்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசித்துள்ளார். அங்கு ஆய்வு செய்தபோது தாசில்தார் ஜெயந்தி, போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு, துணை தாசில்தார் கமலக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |