சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அருகே அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சித்தா மருத்துவமனை, மாத்திரைகள் வழங்கும் இடம் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணிபுரியும் மருத்துவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
அதோடு மட்டுமல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுடைய உறவினர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, கேசவன், இளையான்குடி தாசில்தார் ஆனந்த், மருத்துவர்கள் மற்றும் ஒன்றிய சேர்மன் முனியாண்டி உடன் இருந்துள்ளனர்.