சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.
எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது.
எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம்.
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை.
இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.
எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.
வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.