Categories
பல்சுவை

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் உருவாக்குகிறார்கள். தற்போது இந்த செயலி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் புதிய வசதிகள் மற்றும் மேம்பாட்டுகளை கொண்டு உள்ளது. இந்த புதிய அப்டேட் மேம்படுத்தப்பட்ட ரீமிக்ஸ் வசதி, புதிய template, ஆட்டோ வீடியோ post to real மாற்றும் வசதி, ரீல் பூஸ்ட் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள ரீல் வசதி தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மற்றவர்களின் ரீல்ஸ்களுக்கு நீங்கள் எதிர்வினை செய்ய முடியும். மற்றவர்களின் போஸ்ட் மற்றும் ரில்களுக்கு நீங்கள் எதிர்வினை சேர்த்து அதனை ரெக்கார்ட் செய்யும் வசதி உள்ளது. இந்த ரீமிக்ஸ் வீடியோ உருவாக்க உங்களுக்கு பலவகை Layout வசதிகள் இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் நீங்கள் உண்மையில் எடுத்து ரெக்கார்டிங் மற்றும் ரீமிக்ஸ் இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிட முடியும். அதனை தொடர்ந்து Template மூலம் இனி ரீல் உருவாக்கலாம். இதில் ஏற்கனவே இருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கிளிப் வசதி கொண்டு உள்ளது. இதில் பல Template வசதி கொண்டு உள்ளது. இதனை நமது ஃபோனில் முன்பக்கம் மற்றும் பின் பக்க கேமரா மூலம் உருவாக்கலாம். அதுமட்டுமில்லாமல் 15 நிமிடத்திற்கு குறைவான வீடியோக்களை இன்ஸ்டாகிராம் தானாகவே ரீலாக மாற்றும். ஆனால் இது புதிய வீடியோக்களுக்கு மட்டும் பொருந்தும் பழைய வீடியோக்கள் அனைத்தும் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும். இதனையடுத்து வணிக வசதிக்காக ரீல்களை விளம்பரங்களாக மாற்று வசதி உள்ளது. இதன் மூலம் கூடுதலாக நீங்கள் அதிக பார்வையாளர்களை பெறலாம். ஆனால் இது 100% உண்மையாக இருந்தால் மட்டுமே நாடாகும். இதனை 60 நொடிகளுக்குள் 9:16 என்கின்ற பார்வை அளவு கொண்டு இருக்க வேண்டும். இதனை கூடுதலாக பூஸ்ட் செய்யவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |