Categories
உலக செய்திகள்

“இனி 30 வினாடி இல்ல”, 60 வினாடி…. தகவல் வெளியிட்ட இன்ஸ்டாகிராம்….!!

இணையத்தளவாசிகளின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு உதவும் விதமாக இன்ஸ்டாகிராமில் இனி 60 வினாடிகள் வரை தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. இதில் இணையதள வாசிகள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்வதற்கு ஏற்றவகையில் ரீல்ஸ் என்னும் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பக்கத்தில் 30 வினாடிகள் மட்டுமே இணையதள வாசிகள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்யலாம். இதனால் வீடியோக்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை என்ற கருத்து தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நிர்வாக அதிகாரிகள் புதிய தகவல் ஒன்றை அறிவித்துள்ளார்கள்.

அதாவது 30 வினாடிகள் மட்டுமே வீடியோக்களை பதிவு செய்யப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்த “ரீல்ஸில்” இனி 60 வினாடிகள் வரை தங்களது வீடியோக்களை இணைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |