முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான செயலியானது தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
உலக அளவில் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றான இன்ஸ்டாகிராம் என்னும் செயலி அதிகமாக அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகின்றது. அந்த செயலியில் அதிக அளவு காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இது தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
குறிப்பாக முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியன்று இன்ஸ்டாகிராம் செயலியானது தொடங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 2012 ல் முகநூல் நிறுவனம் இன்ஸ்டாகிராமை வாங்கியுள்ளது. தற்பொழுது இன்ஸ்டாகிராம் தனது 12வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.