மெட்டா நிறுவனத்தினுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் Take a break என்ற புதிதான அம்சம் இந்தியா போன்ற சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் தளத்தை உபயோகப்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். பல மக்கள் இன்ஸ்டாகிராம் தளத்திலேயே மூழ்கி கிடக்கிறார்கள். எனவே, அந்நிறுவனம் மக்கள் அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதிலிருந்து சிறிது இடைவேளை கிடைக்கும் என்று கூறியிருக்கிறது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட அம்சத்தின் மூலமாக பயனர்கள் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்திவிட்டு பிரேக் எடுப்பதற்கு ரிமைண்டர் தரப்பட்டிருக்கிறது. 10 முதல் 30 நிமிடங்கள் வரை இந்த ரிமைண்டர்களை வைத்துக்கொள்ளலாம்.
அதன்படி, அந்த நேர அளவிற்கு தகுந்தவாறு இன்ஸ்டாகிராம் உபயோகிக்கலாம். அதனைத் தாண்டி இன்ஸ்டாகிராமில் இருந்தால், பிரேக் நேரத்திற்கான ஒரு ரிமைண்டர் வந்துவிடும். இளைஞர்களின் நலனுக்காக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதனை, ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளம் உடைய பயனர்கள் தான் பயன்படுத்த முடியும். விரைவில் அண்ட்ராய்டு பயனர்களும் இதனை பயன்படுத்தி விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.