Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமிலிருந்து புகைப்படங்களை நீக்கிய ஷிவானி… ரசிகர்கள் ஷாக்… என்ன காரணம்?…!!!

பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஷிவானி தனது இன்ஸ்டாகிராமில் இருந்து சில புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி. இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான  லைக்ஸ் குவியும். இவரை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கின்றனர் . தினமும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பர் .

shivani instagram photos deleted காணாமல் போன ஷிவானியின் புகைப்படங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவானி மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால்  அவர் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாததால்  அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் . அதுமட்டுமல்லாமல் அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்த சில கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் . இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை .

Categories

Tech |