ஆன்லைனில் பூனைக்குட்டி ஆர்டர் செய்து புலிக்குட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் பூனைக்குட்டிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இதனால் ஆப்பிரிக்கா நாட்டின் பிரபலமான சவானா வகையை சார்ந்த பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். 6,000 யூரோக்கள் ஆன்லைனிலேயே செலுத்திய நிலையில் சவானா பூனைக்குட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அதனுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி நேரத்தை செலவிட தொடங்கினர் தம்பதியினர்.
இந்நிலையில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பூனையின் நடவடிக்கையில் நாளடைவில் மாற்றம் தெரிய தொடங்கியது. இதனால் சந்தேகம் கொண்ட தம்பதியினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விலங்கியல் நிபுணருடன் வந்த காவல்துறையினர் பூனைக்குட்டியை சோதித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஆன்லைனில் அவர்கள் வீட்டிற்கு வந்தது பூனை குட்டி அல்ல சுமத்ரன் வகையை சார்ந்த புலிக்குட்டி. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உயிரியல் காப்பகத்திற்கு புலிக்குட்டியை அனுப்பி வைத்தனர்.