மருத்துவ குணம் வாய்ந்த தேனை எதனுடன் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன மருத்துவ நன்மை கிடைக்கும் என்பது பற்றிய தொகுப்பு
- தினமும் இரவு பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் ஆழ்ந்த உறக்கம் வரும். இதயமும் பலம் பெறும்.
- தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கும்.
- மாதுளம் பழச்சாறுடன் தேனை சேர்த்து சாப்பிடுவதால் அதிக ரத்தம் சுரக்கும்.
- தேன் மற்றும் ரோஜாப்பூ குல்கந்து சேர்த்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தணியும்.
- தேங்காய் பாலுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் ஆறும்.
- தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வருவதனால் வரட்டு இருமல் குணமடையும்.
- தேனுடன் நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிடுவதால் இன்சுலின் சுரக்கும்.
- கேரட் சாறில் தேன் கலந்து சாப்பிடுவதால் ரத்த சோகை சரியாகும்.
- இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோய் குணமாகும்.