Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பயிர் காப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனங்கள்”…. 13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…!!!!!!

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு 13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டிருக்கின்றது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா, ஸ்ரீதரன், ராஜேந்திரன், கோவிந்தராஜ் விவசாயிகளான இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளார்கள். 2016-17 ஆம் வருடத்திற்கான பயிர் காப்பீடு பிரிமியர் தொகை என பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற சட்டத்தின் கீழ் அலிஜியான் இன்சூரன்ஸ் பிரோக்கிங் கம்பெனி மூலம் டெல்லியில் இருக்கும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் செலுத்தி இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் இருந்திருக்கின்றது. இது குறித்து காப்பீடு நிறுவனத்திடம் கேட்டபோது விரைவில் கிடைத்துவிடும் என உறுதி அளித்து இருக்கின்றார்கள். ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் பயிர் காப்பீடு தொகை கிடைக்காததால் மீண்டும் மீண்டும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போதிலும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் இருவரும் சென்ற 2019-ம் வருடம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.

இதில் இளையராஜாவிற்கு பயிர் காப்பீட்டுத் தொகை யானை இரண்டு லட்சத்து 60 8000 மற்றும் அவருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல் ஒரு நஷ்டத்திற்கு இழப்பீடாக 2 லட்சமும் வழக்கு செலவு தொகையாக 10,000 வழங்க வேண்டும்.

இதுபோல ஸ்ரீதரனுக்கு பயிர்காப்பீட்டு தொகையான 2 லட்சத்து 62 ஆயிரம், இழப்பீடாக 2 லட்சம், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம், ராஜேந்திரனுக்கு பயிர்காப்பீட்டு தொகையாக 4 லட்சத்து 66 ஆயிரத்து 500, இழப்பீடாக 4 லட்சம், வழக்கு செலவுக்காக 10 ஆயிரம், கோவிந்தராஜ் நிலத்திற்காக பயிர்காப்பீட்டு தொகையாக 3 லட்சத்து 22 ஆயிரத்து 50, இழப்பீடாக 3 லட்சம், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் என 4 பேருக்கும் மொத்தம் ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் மத்திய அரசின் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி டெவலப்மென்ட் அத்தாரிட்டி நிறுவனம் இனிமேல் இது போன்ற தவறு நடக்காமலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

Categories

Tech |