Categories
உலக செய்திகள்

“மலை உச்சியிலிருந்து நான் தான் தள்ளி விட்டேன்”… இன்சூரன்ஸ் பணத்திற்காக… 7 மாத கர்ப்பிணியை கொலை செய்த கொடூரம்…!!

துருக்கியில் ஆயுள் காப்பீடு பணத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல்(40). இவருடைய மனைவி சேம்ரா ஐசல்(32). ஹகான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 மாத கர்ப்பிணியான சேம்ராவை முக்லா நகரத்தில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு பகுதிக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு உள்ள உயரமான மலைக்கு அழைத்து சென்று ரொமான்டிக்காக செல்பி எடுத்து இருக்கிறார்.

ஆனால் அதன் பிறகு  சேம்ரா திடீரென கால்தவறி மலை உச்சியிலிருந்து விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 7 மாத கர்ப்பிணியான தனது மனைவியை மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டு கால் தவறி விழுந்ததாக நாடகமாடி உள்ளது தெரியவந்தது. இன்சூரன்ஸ் பணத்துக்காக ஆசைப்பட்டு இவ்வாறு செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

Categories

Tech |