மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுக செய்த, சர்பேஸ் கோ 3 என்ற புதிய மாடலில், 10.25 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, கிக்ஸ்டாண்டு(அட்ஜஸ்ட் டைப்), 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் போன்றவை இருக்கிறது. மேலும், 8 GB RAM, சர்பேஸ் பென் வசதி, இயங்குதளம் விண்டோஸ் 11 கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் எடை 544 கிராம். சர்பேஸ் கோ3, 8.3 MM அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 4GB or 8GB RAM, இன்டெல் யு.ஹெச்.டி, கிராபிக்ஸ் 615, 64 ஜிபி இ.எம்.எம்.சி அல்லது 128 ஜிபி எஸ்.எஸ்.டி, ப்ளூடூத் 5, வைபை 6, தொழில்நுட்பம் இருக்கிறது.
இந்தியாவில், இந்த சர்பேஸ் கோ 3, 4GB RAM, 64 ஜிபி இ.எம்.எம்.சி. ஸ்டோரேஜ் உடைய மாடலின் விலை 42,999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இன்டெல் கோர் ஐ3, 8 GB RAM, 128 ஜிபி எஸ்.எஸ்.டி. உடைய மாடல் 62,999 ரூபாயாகும். அமேசானில் நவம்பர் 23 ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.