Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. மர்மநபர்கள் துப்பாக்கிசூடு தாக்குதல்…. புலனாய்வுத் துறை அதிகாரி பலி…!!!

பாகிஸ்தான் நாட்டில் புலனாய்வுத்துறை அதிகாரி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர் நகரத்தின் யகதூத் பகுதியில் காவல்துறையினர் இரவு உணவிற்குப்பின் வாகனத்தில் ஏற சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நஜ்பீர்
ரகுமான் என்ற புலனாய்வுத்துறை உதவி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமனுல்லா என்ற அதிகாரியும் அவரின் சகோதரரும் காயமடைந்திருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு துறை இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |