நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தங்கள் நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல நாடுகளும் தென்ஆப்பிரிக்காவுடனான விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார கண்காணிப்பு பகுதிகள் தங்கள் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.