நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததையடுத்து அப்பகுதிகளில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இப்பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தற்போது நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு போதிய மழை பெய்துள்ளதால் நல்ல மகசூல் கிடைக்கும் என்றும் நெல் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.