சந்தையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் எந்தவித நஷ்டமும் இன்றி சிறந்த முதலீடாக இருப்பது வைப்பு நிதி திட்டம் தான். இது மிகவும் பாதுகாப்பானது. அந்தவகையில் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வட்டி விகிதமானது அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்று இவ்வங்கி அறிவித்துள்ளது.
திருத்தம் செய்யப்பட்ட வட்டி விகிதங்கள்
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 2.95%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 3.9%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் – 4%
180 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.45%
1 வருடத்திற்கு மட்டும் – 5.20%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் – 5.2%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.4%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.5%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு – 5.5%