Categories
தேசிய செய்திகள்

வங்கியில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு….. இனி பணத்தை மிச்சப்படுத்தலாம்….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்தது. அதன் பிறகு ஒவ்வொரு வங்கிகளிலும் வட்டி விகிதமானது அதிகரிக்க தொடங்கியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஃபிக்சட் டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதம் உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதால் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் வங்கிகள் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஐடிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் தள்ளுபடியை அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது பொதுத்துறை வங்கியான Bank of Maharashtra-வும் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தில் தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த வங்கியில் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.3 சதவீதம் இருக்கும் நிலையில், 8 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த சலுகையை பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும். அதன் பிறகு தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி குறைத்துள்ளது. அதன்படி 11.35 சதவீதத்திலிருந்து வட்டி விகிதமானது தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் நகை கடன் போன்றவை களுக்கான பிராசசிங் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை சேமித்துக் கொள்ளமுடியும்.

Categories

Tech |