Categories
மாநில செய்திகள்

விரைவில்… காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்…!!

தமிழகத்திலும் காலி இடங்களுக்கான தேர்தலை பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

பீகார் சட்டமன்ற தேர்தலுடன் இணைந்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளிட்ட 65 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து வழிமுறைகளை வழங்க நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில், கனமழை, கொரோனா பேரிடர் போன்ற காரணங்களால் இடைத்தேர்தல்தளை தள்ளிவைக்கலாம் எனக் கோரிக்கை எழுந்து வந்தது.

அந்த வகையில், பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலர்கள் கொடுத்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. நவம்பர் 29ஆம் தேதிக்கு முன்னரே பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அதே நேரத்தில் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடித்து விடலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |