துபாயில் உலக வர்த்தக மையத்தில் சர்வதேச மனிதாபிமான உதவியும் மேம்பாடும் குறித்த கண்காட்சி கருத்தரங்கு நேற்று ஆரம்பமாகியிருக்கிறது.
சர்வதேச மனிதாபிமான உதவி மற்றும் மேம்பாடு குறித்த கண்காட்சிக்கான கருத்தரங்கில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் உட்பட 80 நாடுகளின் சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்புகள் கலந்துகொண்டிருக்கின்றன. 18-ஆம் வருடமாக நடக்கும் இந்த கண்காட்சியில் 600க்கும் அதிகமான சர்வதேச அளவில் இருக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பங்கேற்றுள்ளன.
இந்த வருடம் “ஐ.நா சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் 50-க்கும் அதிகமான வல்லுனர்கள் உரையாற்றுகின்றனர். துபாய் அரசாங்கத்தின் தகவல் தொடர்புத்துறையின் பொது இயக்குனரான ஷேக் ஹசர் பின் மக்தூம் அல் மக்தூம் துவக்கி வைத்திருக்கிறார்.
நாளை, இக்கண்காட்சியும் கருத்தரங்கும் முடிவடைகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இக்கண்காட்சி நடக்கிறது.