Categories
உலக செய்திகள்

கொரோனா பற்றி தகவல் சொன்ன 6 பேரை எங்கே?… உண்மையை மறைக்கிறதா சீனா?… வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல் தெரிவித்த 6 பேரை காணவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது..

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கொடிய வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.. இதனிடையே கொரோனா வூஹானில் பரவியபோது, இந்த வைரஸ் தொடர்பாக தகவல் சொன்ன  6 பேரை இதுவரையில் காணவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் 3 மருத்துவர்கள், 2 விஞ்ஞானிகள் மற்றும் ஒரு ஊடகவியலாளர் என மொத்தம் 6 பேர் அடங்குவார்கள். இவர்களை தவிர சீனாவின் வெளவால் பெண் என்றழைக்கப்படும் வைரஸ் விஞ்ஞானி ஒருவரையும் காணவில்லை. இதனால் இதில் ஏதோ மர்மம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.. இவர்கள் அனைவரின் வாயையும் அடைத்து அவர்களை எங்கேயோ தலைமறைவாக வைத்துள்ளது சீன அரசு. தற்போது இவர்கள் அனைவருமே உயிரோடு தான் இருக்கிறார்களா என தெரியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |