Categories
உலக செய்திகள்

“உலகிலேயே அதிக வெட்பம்” பட்டியலை வெளியிட்ட சர்வதேச வானிலை மையம் …!!

உலகிலேயே நான்காவது அதிகபட்ச வெப்பநிலையை கொண்ட நாடு  பாகிஸ்தான் என்று சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் முழுவதும் நடைபெறும் வானிலை மாற்றம், பருவமழை மற்றும் வெப்பநிலை குறித்த தகவலை சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2016_ஆம் ஆண்டு ஜூலை 21_ஆம் தேதி குவைத்திலும் , 2017_ஆம் ஆண்டு மே 28_ஆம் தேதி பாகிஸ்தானிலும்  54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக சொல்லப்பட்டது. இந்த அளவுகளில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம்  மறுப்பு தெரிவித்தது.

Image result for உலகிலேயே அதிகபட்ச வெப்பநிலை

இந்நிலையில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள , இத்தாலி, குவைத், பாகிஸ்தான். சவுதி அரேபியா, பிரான்ஸ், ஸ்பெயின், மொராக்கோ, எகிப்து, துருக்கி, ஆர்மேனியா, ஈரான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்த சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

இந்த ஆய்வின் முடிவில்  குவைத்தில் தான் உலகளவில் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை 53.9 டிகிரி செல்சியஸ்  பதிவாகியுள்ளதாகவும் , பாகிஸ்தான் நாட்டின் தர்பாத் பகுதியில் 53.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி பூமியின் நான்காவது அதிகபட்ச வெப்பநிலை என்றும் தெரிவித்தது. குவைத் நாட்டின் மிட்ரிபா பகுதியில் நிலவிய வெப்பநிலையே  கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குஆசிய கண்டத்திலேயே மிக அதிக வெப்பநிலை என்றும் சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம்  தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உலகின் நான்காவது அதிகபட்ச வெப்பநிலை - சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம்

இதில் கடந்த 1913_ஆம் ஆண்டு ஜூலை 10_ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பர்னாஸ் கிரீக் பகுதியில் பதிவாகிய 56.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தான் பூமியிலேயே பதிவானஅதிகபட்ச வெப்பநிலையாககும். அதே போல  1931_ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் துனிசியாவின் கெபிலி பகுதியில் பதிவான 55 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலையே பூமியின் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும் என்றும் சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |