பொருளியல் வல்லுநரான கீதா கோபிநாத் International Monetary Fundன் தலைமை பதவியிலிருந்து விலக உள்ளார்.
International Monetary Fund அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் என்பவர் பதவியேற்றார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் பிறந்த இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மற்றும் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருக்கும் மூன்றாவது பெண் என்ற பெருமையையும் தட்டிச் சென்றவர்.
அதன்பின் இவருக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் விடுமுறை அளித்ததால் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக சேர்ந்தார். இந்நிலையில் ஹார்ட்வேர்டு பல்கலைக்கழகமானது அவருக்கு கொடுத்த விடுமுறை முடிவடைய உள்ளது. இதனால் அவர் நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி கொள்கிறார். மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையில் மீண்டும் பேராசிரியராக இணைய உள்ளார்.
இதைப் பற்றி சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா கூறியதாவது “கீதா கோபிநாத் தான் சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைவர் ஆவார். இவர் கொரோனா தொற்றின் போது விமர்சன பகுப்பாய்வு எழுதி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கையாண்டதில் அவருடைய திட்டமிடல் மற்றும் புத்திசாலித்தனம் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை அடுத்து கொரோனா பெருந் தொற்றை முடிவுக்கு கொண்டு கொண்டுவர உலகளாவிய தடுப்பூசி இலக்குகளை நிர்ணயிப்பதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நிதியத்தில் ஒரு காலநிலை மாற்ற குழுவை அமைக்க அவர் உதவி புரிந்தார்” என்று கூறியுள்ளார்.